For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2012ல் இந்தியா: ஒரு பார்வை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: 2012ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த ஆண்டில் பல மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளும், துயரமளிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

2012ம் ஆண்டு முடிய இன்னும் 4 நாட்கள் தான் உள்ளன. உலக மக்கள் புத்தாண்டை வரவேற்கத் தயாராகிவிட்டனர். புத்தாண்டை எப்படி கொண்டாடலாம், அன்றைய தினத்தில் என்ன உறுதிமொழி எடுக்கலாம் என்று மக்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர்.

புத்தாண்டை வரவேற்கத் தயாராக உள்ள நிலையில் நடப்பாண்டில் இந்தியாவில் நடந்த நிகழ்வுகளை சற்று நினைவு கூறுவோம். இந்திய மகளிர் அணி உலக கபடி கோப்பையை வென்ற சந்தோஷமான நிகழ்ச்சி முதல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட துயர சம்பவங்கள் வரை பல வகையான நிகழ்வுகளைப் பார்ப்போம்.

கல்மாடிக்கு ஜாமீன்

கல்மாடிக்கு ஜாமீன்

ஜனவரி 19: காமன்வெல்த் ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

63வது குடியரசு தினம்

63வது குடியரசு தினம்

ஜனவரி 26: 63வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. தாய்லாந்து பிரமதர் யிங்லக் ஷினாவத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

122 2ஜி உரிமங்கள் ரத்து

122 2ஜி உரிமங்கள் ரத்து

பிப்ரவரி 2: 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ. ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

சாமியின் மனு தள்ளுபடி

சாமியின் மனு தள்ளுபடி

பிப்ரவரி 5: 2ஜி ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமியின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செல்போனில் ஆபாச படம் பார்த்த கர்நாடக அமைச்சர்கள்

செல்போனில் ஆபாச படம் பார்த்த கர்நாடக அமைச்சர்கள்

பிப்ரவரி 8: கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்து சிக்கிய 3 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

வயது சர்ச்சை

வயது சர்ச்சை

பிப்ரவரி 11: வயது சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ராணுவ தளபதி வி.கே. சிங் வாபஸ் பெற்றார்.

இஸ்ரேல் தூதரக காரில் குண்டுவெடிப்பு

இஸ்ரேல் தூதரக காரில் குண்டுவெடிப்பு

பிப்ரவரி 14: டெல்லியில் இஸ்ரேல் தூதரக காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது.

கபடி உலகக் கோப்பை

கபடி உலகக் கோப்பை

மார்ச் 4: பெண்கள் கபடி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

ராகுல் டிராவிட் ஓய்வு

ராகுல் டிராவிட் ஓய்வு

மார்ச் 10: கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

மார்ச் 16: மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு

மார்ச் 22: இலங்கையில் இறுதிப் போரி்ன்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

சர்தாரியின் இந்திய பயணம்

சர்தாரியின் இந்திய பயணம்

ஏப்ரல் 8: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அஜ்மீர் தர்காவுக்கு வந்தார்.

குஜராத் கலவர தீர்ப்பு

குஜராத் கலவர தீர்ப்பு

ஏப்ரல் 12: 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது ஓட் கிராமத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக 18 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

சுக்மா கலெக்டர் கடத்தல்

சுக்மா கலெக்டர் கடத்தல்

ஏப்ரல் 21: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டார்.

சச்சின் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு

சச்சின் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு

ஏப்ரல் 26: சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். ஜூன் மாதம் 5ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

ஏர் இந்திய விமானிகள் ஸ்டிரைக்

ஏர் இந்திய விமானிகள் ஸ்டிரைக்

மே 8: ஏர் இந்திய நிறுவன விமானிகள் 100 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தின் வைர விழா

நாடாளுமன்றத்தின் வைர விழா

மே 13: இந்திய நாடாளுமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

ஐபிஎல்5 சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

ஐபிஎல்5 சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

மே 27: ஐபிஎல் 5வது சீசனில் கோப்பையை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

புதிய ராணுவ தளபதி

புதிய ராணுவ தளபதி

மே 31: பிக்ரம் சிங் இந்திய ராணுவத்தின் தளபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையர்

புதிய தலைமை தேர்தல் ஆணையர்

ஜூன் 11: தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ். சம்பத் பதவியேற்றுக் கொண்டார்.

அபு ஜிண்டால் கைது

அபு ஜிண்டால் கைது

ஜூன் 26: 26/11 தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டாலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மாயாவதிக்கு நிம்மதி

மாயாவதிக்கு நிம்மதி

ஜூலை 6: மாயாவதிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கர்நாடக முதல்வரானார் ஷெட்டர்

கர்நாடக முதல்வரானார் ஷெட்டர்

ஜூலை 12: ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

ராஜேஷ் கன்னா மரணம்

ராஜேஷ் கன்னா மரணம்

ஜூலை 18: இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா இறந்தார்.

அஸ்ஸாம் இனக்கலவரம்

அஸ்ஸாம் இனக்கலவரம்

ஜூலை 20: அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து அது பிற மாவட்டங்களுக்கும் பரவியதில் 90க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

13வது ஜனாதிபதி பிரணாப்

13வது ஜனாதிபதி பிரணாப்

ஜூலை 22: பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13வது ஜனாதிபதியாகத் தேர்வானார்.

எஸ்.எம்.எஸ். வதந்தி

எஸ்.எம்.எஸ். வதந்தி

ஆகஸ்ட் 8: ரம்ஜான் பண்டிகை முடிந்தவுடன் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்படுவார்கள் என்று எஸ்.எம்.எஸ். மூலம் பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர்கள் பெங்களூரில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கு சென்றனர்.

2வது முறையாக துணை ஜனாதிபதியான அன்சாரி

2வது முறையாக துணை ஜனாதிபதியான அன்சாரி

ஆகஸ்ட் 10: ஹமீத் அன்சாரி இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

விலாஸ் ராவ் தேஷ்முக் மரணம்

விலாஸ் ராவ் தேஷ்முக் மரணம்

ஆகஸ்ட் 14: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் சென்னையில் காலமானார்.

வர்கீஸ் குரியன் மரணம்

வர்கீஸ் குரியன் மரணம்

செப்டம்பர் 9: இந்தியாவில் வெண்மை புரட்சியை ஏற்படுத்திய வர்கீஸ் குரியன் மறைந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய மமதா

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய மமதா

செப்டம்பர் 18: மத்திய அரசு மக்களுக்கு விரோதமாக நடப்பதாகக் கூறி திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

யஷ் சோப்ரா மரணம்

யஷ் சோப்ரா மரணம்

அக்டோபர் 21: பிரபல பாலிவுட் இயக்குனர் யஷ் சோப்ரா இறந்தார்.

2ஜி மறுஏலம்

2ஜி மறுஏலம்

நவம்பர் 12, 14: உச்ச நீதிமன்றம் 122 2ஜி உரிமங்களை ரத்து செய்ததையடுத்து 2ஜி ஸ்பெக்டரம் மறுஏலம் நவம்பர் 12 மற்றும் 14 ஆகிய 2 தேதிகளில் நடந்தது. இந்த ஏலத்தில் ரூ.40,000 கோடி கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் வெறும் ரூ.9,000 கோடி தான் கிடைத்தது.

பால் தாக்கரே மரணம்

பால் தாக்கரே மரணம்

நவம்பர் 17: சிவ தேனா தலைவர் பால் தாக்கரே இறந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நடந்த அன்று மும்பையில் நடந்த பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட, லைக் கொடுத்த 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அஜ்மல் கசாப் தூக்கு

அஜ்மல் கசாப் தூக்கு

நவம்பர் 21: 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான்.

ஐ.கே. குஜ்ரால் மரணம்

ஐ.கே. குஜ்ரால் மரணம்

நவம்பர் 30: முன்னாள் இந்திய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் காலமானார்.

ரவி சங்கர் மரணம்

ரவி சங்கர் மரணம்

டிசம்பர் 11: பிரபல சிதார் இசை மேதை ரவி சங்கர் தனது 92வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியீடு

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியீடு

டிசம்பர் 20: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. நரேந்திர மோடி நான்காவது முறையாக குஜராத் முதல்வராகத் தேர்வானார். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

4வது முறையாக முதல்வரானார் மோடி

4வது முறையாக முதல்வரானார் மோடி

டிசம்பர் 26: நரேந்திர மோடி நான்காவது முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாஜக தலைவர்கள் அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ், மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
India has seen both joyous and saddest moments in 2012. Above is the compilation of the important events that happened in India in 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X