For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீதையை வைத்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினராக பதவியேற்ற முதல் இந்து பெண்

By Siva
Google Oneindia Tamil News

Tulsi Gabbard
வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இந்திய அமெரிக்கரான அமி பெராவும், துளசி கப்பார்டும் பதவியேற்றுக் கொண்டனர்.

அண்மையில் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் எமி பராவும், ஹவாய் தீவைச் சேர்ந்த ஈராக் போர் வீராங்கனை துளசி கப்பார்டும் வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக நேற்று முறையே பதவியேற்றுக் கொண்டனர்.

பதவி ஏற்பு விழாவில் எமியின் மனைவி, மகள், சகேதரர்கள், தந்தை உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் வாழும் ஏராளமான இந்தியர்கள் துளசி பதவியேற்பதை கண்டு மகிழ்ந்தனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய அமெரிக்கர் எமி பெரா ஆவார். அவருக்கு முன்பு 1950ல் தலிப் சிங் சவுந்த் மற்றும் 2005ல் பாபி ஜிந்தால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த சபைக்கு முதன்முதலாக தேர்வாகியுள்ள இந்து துளசி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பகவத் கீதையின் போதனைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அதனால் நான் கீதையை வைத்து தான் பதவியேற்றேன் என்று பதிவேற்ற பிறகு துளசி தெரிவித்தார்.

English summary
Indian American physician from California, Ami Bera, and the young Iraq war veteran from Hawaii, Tulsi Gabbard, created history on Thursday after being sworn in as new members of the US House of Representatives. Bera is only the third Indian American -- after Dalip Singh Saundh in 1950 and Bobby Jindal in 2005 -- to have ever been elected to the House of Representatives. Tulsi Gabbard is the first Hindu ever to win the Congressional election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X