Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இனி ஒன்இந்தியா மூலம் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யலாம்!

Posted by:
Updated: Friday, January 11, 2013, 17:24 [IST]

 Oneindia Launches Online Mobile Dth And Datacard

இந்தியாவின் நம்பர் ஒன் மொழி இணையதளமான ஒன்இந்தியாவின் மூலம் இனி உங்களது செல்போன், டிடிஎச் மற்றும் டேட்டாகார்ட் இன்டர்நெட்டுக்கு ரீசார்ஜ் செய்யலாம். இதற்காக recharge.oneindia.in என்ற புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் இனி ரீசார்ஜ் செய்வது எளிதாகியுள்ளது. பயன்பாட்டாளர்களின் விருப்பம் மற்றும் சவுகரியத்திற்கேற்ப ரீசார்ஜ் செய்வது இதன் மூலம் சாத்தியமாகியுள்ளது.

என்னெல்லாம் கிடைக்கிறது recharge.oneindia.in-வில்?

1. மொபைல் டாப் அப்ஸ் - ஏர்டெல், வோடோபோன், ஐடியா, டாடா இன்டிகாம், ரிலையன்ஸ், பிஎஸ்என்எல், ஏர்செல், விர்ஜின் மொபைல், டாடா டோகோமோ, ரிலையன்ஸ் சிஎம்டிஏ.

2. டேட்டா கார்டு - டாடா டோகோமோ போட்டான் விஸ், டாடா டோகோமோ போட்டான் பிளஸ், ரிலையன்ஸ் நெட்கனெக்ட்+, எம்டிஎஸ் எம்பிளேஸ், எம்டிஎஸ் எம்பிரவுஸ், பிஎஸ்என்எல், ஐடியா 3ஜி நெட்செட்டர்.

3. டிடிஎச் - டாடா ஸ்கை, டிஷ் டிவி, ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி, சன் டைரக்ட், வீடியோகான் டி2எச், ஏர்டெல் டிஜிட்டல் டிவி.

recharge.oneindia.in என்றால் என்ன?

ஒன்இந்தியா தொடங்கியுள்ள புதிய ரீசார்ஜுக்கான இணையதளமே இந்த recharge.oneindia.in. இந்தியாவின் அனைத்து முன்னணி மொபைல், டிடிஎச், டேட்டா கார்டு சேவையாளர்களின் ரீசார்ஜ் சேவைகளும் இங்கு கிடைக்கும்.

இதன் மூலம் உங்களது நேரம் மிச்சமாகிறது. உங்கள் சவுகரியத்திற்கேற்ப ரீசார்ஜ் செய்யலாம், எந்த நேரத்திலும் உட்கார்ந்த இடத்தில் செய்யலாம். உங்களது ப்ரீபெய்டு மொபைல் கணக்குக்கு விசா, மாஸ்டர் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ரீசார்ஜ் வவுச்சர்கள், எஸ்எம்எஸ் பேக்குகள், கட்டண விவரங்கள் மற்றும் பிற பொருட்களை நீங்கள் பெற முடியும்.

எப்படி ரீசார்ஜ் செய்வது?

1. உங்களுக்கான திட்டத்தை தேர்வு செய்யுங்கள் - உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்தால் உங்களது சேவையாளர், என்ன திட்டமெல்லாம் உள்ளது என்ற விவரம் தானாகவே வரும். அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதைத் தேர்வு செய்து கட்டணத்தையும் தேர்வு செய்து புரஸீட் பட்டனை அழுத்துங்கள்.

2. இமெயில் - உங்களது பரிவர்த்தனை விவரங்களை இமெயில் மூலம் பெற விரும்பினால் உங்களது இமெயில் முகவரியைப் பதிவு செய்யுங்கள். இமெயிலைப் பதிவு செய்து விட்டு பின்னர் "Pay with Mobikwik Wallet" என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. கட்டணம் செலுத்தும் முறை - உங்களுக்குச் சவுகரியமான கட்டணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்து "Add Money" என்ற பட்டனை அழுத்துங்கள்.

4. பேமன்ட் கேட்வே - உங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரத்தை அல்லது வங்கி விவரத்தை தெரிவித்து "Pay with Zaakpay" என்ற பட்டனை அழுத்துங்கள்.

5. உறுதிப்படுத்துதல் - உங்களது ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிந்து விட்டது என்றால் அதை உறுதிப்படுத்தும் செய்தி திரையில் தோன்றும். மேலும் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகை உங்களது கணக்கிலும் உடனடியாக வந்து சேரும்.

ஒருவேளை ரீசார்ஜ் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தால்... சற்றும் கவலைப்படாதீர்கள். உங்களது பணம் எங்களது Mobikwik wallet-ல் பத்திரமாக இருக்கும். மீண்டும் லாகின் செய்து மறுபடியும் ரீசார்ஜ் முயற்சியைத் தொடரலாம்.

கட்டண முறை

விசா மற்றும் மாஸ்டர் கார்டு வைத்துள்ள கிரெடிட் கார்டுதாரர்கள், விசா, விசா எலக்ட்ரான், மாஸ்டர்கார்ட், மாஸ்ட்ரோ கார்டு வைத்துள்ள டெபிட் கார்டுதாரர்கள் இங்கே ரீசார்ஜ் செய்ய முடியும். நெட் பாங்கிங்கையும் கூட பயன்படுத்தலாம்.

Story first published:  Friday, January 11, 2013, 17:22 [IST]
English summary
Oneindia, India's #1 language portal has launched an online Mobile, DTH and Datacard instant recharging platform with a vision of creating a recharge station. Using this, the customers can make all their recharges any time from any location using the powerful medium Internet, giving user the freedom to recharge according to their choice & convenience.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Mumbai Indians: 132 / 6, 16 Overs