Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

“ராமன் மோசமான கணவன்”… விமர்ச்சித்த ராம் ஜெத்மலானி மீது வழக்கு பதிவு

Posted by:
Published: Friday, January 18, 2013, 11:11 [IST]

 Case Against Bjp Ram Jethmalani

ஹைதராபாத்: இந்துக்கடவுள் ராமரை ஒரு மோசமான கணவன் என்று விமர்சித்த ராம் ஜெத்மலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ.க.வின் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி கடந்த வருடம் நவம்பர் 8ந் தேதி டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது ராமரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

ராமர் ஒரு மோசமான கணவன் என்றும், அவர் யாரோ சொன்ன பேச்சை கேட்டு சீதையை சந்தேகித்து வனவாசத்திற்கு அனுப்பியவர்தானே ராமர். எனவே ராமர் தான் உலகின் உத்தம புருஷர் என்பதிலோ அவர் நல்லவர் என்பதிலோ தனக்கு உடன்பாடு இல்லை என கருத்து தெரிவித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு

ராம் ஜெத்மலானியின் இந்த கருத்து பா.ஜ.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ராம் ஜெத்மலானியின் கருத்துக்கு எதிராக முகமது சலீம் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக விசாரிக்கும்படி போலீசாரை நீதிமன்றம் கேட்டு கொண்டது. அதன்பேரில், பிரிவு எண் 153ஏ&ன் கீழ் (மதம், இனம், பிறந்த இடம் மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகையை வளர்த்தல்) மற்றும் பிற பிரிவுகளின் கீழும் போலீசார் ராம் ஜெத்மலானி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

English summary
Acting on a court order, the police today lodged a case against suspended BJP MP Ram Jethmalani for his controversial remarks on Lord Rama during a function in Delhi on November 8.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter