Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வீரர்கள் படுகொலை - தேவையான நடவடிக்கை எடுக்கிறது ராணுவம்: அப்துல் கலாம்

Posted by:
Published: Friday, January 18, 2013, 11:19 [IST]

 India Is Taking Stern Action Tackle Border Tension

கொல்கத்தா: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்திய ராணுவம் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய கலாம், எல்லையில் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமானது. இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நிலைமையை ராணுவம் எதிர்கொள்ளும்.

ஏவுகணை அபிவிருத்தி என்பது அமைதியை ஏற்படுத்தக் கூடியது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீதான அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்தே ஏவுகணைப் போட்டி உருவானது.

தற்போது உலக நாடுகள் பலவும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருகின்றன. ஆனால் அணு ஆயுதப் போர் நடைபெற்றது இல்லை. இதனால் ஏவுகணைகள் அமைதிக்கு வழிவகுக்கக் கூடியவை என்றே நாம் சொல்லலாம் என்றார்.

English summary
In the wake of escalating border tensions with Pakistan over the brutal killing of two Indian soldiers, former president A.P.J. Abdul Kalam Thursday said the government should, and is, taking stern action.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST