Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

''எழுந்திரு நேரமாச்சு''… ஷாக் அடித்து எழுப்பும் அலாரம் டைம்பீஸ்!

Posted by:
Published: Friday, January 18, 2013, 14:45 [IST]

 Indian Student Invents Alarm Clock That Shocks You

அதிகாலையில் எழுவதற்கு அலாரம் வைத்துவிட்டு உறங்குவார்கள். அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டி அதை நிறுத்திவிட்டு பின்னர் உறங்கிவிடுவார்கள்.

இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்காக ஷாக் அடிக்கும் அலாரம் டைப்பீஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இந்தியாவின் இளம் விஞ்ஞானி ஒருவர். சங்கல்ப் சின்ஹா என்ற அந்த 19 வயது விஞ்ஞானி கண்டுபிடித்துள்ள இந்த புதியவகை டைம்பீஸ் ஸ்னூஸ் பட்டனில் ஒரு வோல்டேஜ் மின்சாரம் பாய்கிறது. அலாரம் அடிக்கும் போது அதன் தலையில் தட்டுபவர்களுக்கு சட்டென்று ஷாக் அடிக்கும். இதனால் தூக்கம் கலைந்து அவர்கள் எழுந்து விடுவார்களாம்.

உத்தரபிரதேச மாநிலம் சாரதா பல்கலைக்கழக மாணவரான சங்கல்ப் சின்கா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த அலாரம் டைம்பீஸை கண்டுபிடித்துவிட்டார். ஆனால் லேட்டாகத்தான் இந்த சாதனை வெளி உலகத்திற்குத் தெரியவந்துள்ளது.

ஷாக் அடிக்கும் போது புதுவித சக்தி உடலுக்குள் பரவும். அதற்காகவே இந்த டைம்பீஸை கண்டுபிடித்துள்ளதாக சங்கல்ப் கூறியுள்ளார். ஆட்டோ மொபைல் எஞ்சினியரிங் படித்து வரும் சின்கா, குட் மார்னிங் சிங் இன் ஷாக் என்று அந்த டைம் பீஸிக்கு பெயரிட்டுள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்பை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக கடிகார நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறார் சங்கல்ப் சின்ஹா.

English summary
An Indian student, who was unable to get up in time for lectures, has invented an alarm clock that wakes up the owner with a shock. Sankalp Sinha, 19, came up with the idea after getting into the habit of hitting the snooze button on his alarm clock and then going back to sleep.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs