Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இத்தாலிய படையினருக்கு எதிரான வழக்கை கேரள ஹைகோர்ட் விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Posted by:
Published: Friday, January 18, 2013, 13:05 [IST]

டெல்லி: கொல்லம் கடற்பரப்பில் தமிழக மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் கடற்பரப்பில் கேரளாவில் வசித்து வந்த தமிழக மீனவர் இருவரை இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் இரு இத்தாலிய கடற்படையினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அண்மையில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக அவர்கள் இத்தாலி சென்றுவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலிய கடற்படையினர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி சேதமேஸ்வர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, சம்பவம் நடைபெற்ற இடம் சர்வதேச கடல் எல்லை என கேரள போலீசார் கூறியுள்ளனர். சர்வதேச கடல் எல்லையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை கேரள உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது. அப்படி விசாரிக்க வேண்டுமானால் சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று பிற்பகலில் கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது.

English summary
In a major judgment on a petition filed by Italy citing India had no right to take action against the Italian marines who had been charged with the shooting of two Indian fishermen off Kerala coast, the Supreme Court Friday ruled that Kerala has no legal authority to try the accused marines.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL