Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மலேசிய ஓபன்: காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால்

Posted by:
Published: Friday, January 18, 2013, 11:24 [IST]

 Saina Nehwal Sails Into Malaysia Open Quarters

கோலாலம்பூர்: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மலேசிய ஓபன் போட்டியில் காலிறுதிக்குள் நுழைந்தார்.

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சாய்னா நேவால் ஹாங்காங்கின் பூய் இன் இப் என்பவருடன் நேற்று மோதினார். ஆட்டம் துவங்கியது முதலே சாய்னா சிறப்பாக ஆடி ஹாங்காங் வீராங்கனையை நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த போட்டியில் சாய்னா 21-12, 21-9 என்ற கணக்கில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலாலம்பூரில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் சாய்னா ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவுடன் மோதுகிறார். உலகத் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சாய்னா 33வது இடத்தில் இருக்கும் நொசோமியுடன் இதுவரை மோதியதே இல்லை.

English summary
Saina Nehwal has entered the quarter finals of Malaysian open after beating Hong Kong's Pui Yin Yip.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter