சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியில் மோதலில் ஈடுபட்ட போலீசார் இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேத்தியாத்தோப்பு அருகே பு.உடையூரில் நேற்று முன்தினம் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் அச்சுதராஜ், பாக்கியராஜ் ஆகியோர் போட்டியைப் பார்க்க தமது வெளியூர் நண்பர்களை அழைத்திருந்தனர். சேத்தியாத்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த போலீஸார் ராஜேஷ், வேலு உள்ளிட்டோர் புடையூருக்கு போட்டியை காணச் சென்றனர்.
அப்போது அச்சுதராஜ் தரப்புக்கும் ஊர்மக்களுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சோழத்தரம் போலீசில் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு போலீசார் உட்பட 6 பேர் கைது செய்யாப்ட்டனர்.


















