Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஃபேஸ்புக்கில் 1 கோடி ஃபேன்ஸ்: சச்சினை தோற்கடித்த ஏ.ஆர். ரஹ்மான்

Posted by:
Updated: Friday, January 18, 2013, 16:04 [IST]

 Ar Rahman More Popular Than Big B Tendulkar On Facebook

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஃபேஸ்புக்கில் 1 கோடி ஃபேன்கள் உள்ளனர்.

ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். ஃபேஸ்புக்கில் அவருக்கு உள்ள ஃபேன்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. அவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10,138,509 பேர் லைக் கொடுத்துள்ளநர். 81, 159 பேர் அதில் கமெண்ட் எழுதியுள்ளனர்.

இதையடுத்து ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 10,000,000 மற்றும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோரை விட ஃபேஸ்புக்கில் ரஹ்மானுக்கு தான் அதிக ஃபேன்கள். ரஹ்மானை அடுத்து சச்சினுக்கு 9,109,898 ஃபேன்களும், சல்மானுக்கு 7,534,958 ஃபேன்களும், ஆமீர் கானுக்கு 6,367,036 ஃபேன்களும், அமிதாபுக்கு 3,600,477 ஃபேன்களும், பிரியங்கா சோப்ராவுக்கு 3,552,699 ஃபேன்களும் உள்ளனர். இவர்களை அடுத்து ரித்திக் ரோஷன், ஷாருக்கான், அக்ஷய் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு அதிக ஃபேன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Friday, January 18, 2013, 15:50 [IST]
English summary
With more than one crore fan following on Facebook, Oscar-winning music composer A R Rahman has become the most popular Indian on the social networking site by leaving behind Amitabh Bachchan and Sachin Tendulkar. The 46-year-old ‘Jai Ho’ hitmaker, who has a page on Facebook, has been liked by 10,138,509 fans and 81,159 people have commented on it.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings decided to bat