Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Posted by:
Published: Friday, January 18, 2013, 13:11 [IST]

சென்னை: காவிரி நீர் பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பனின் வீட்டை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து பேசிய சுதர்சன நாச்சியப்பன், தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாலும் கர்நாடகா அதை செயல்படுத்தும் என்பது என்ன நிச்சயம் என்று கூறினார். தமிழக விவசாயிகள் கர்நாடகத்தோடு போர் நடத்தி தண்ணீரைப் பெறப்போகிறார்களா என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சென்னையில் உள்ள சுதர்சன நாச்சியப்பன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

எம்.பி வீடுகளை முற்றுகையிடுவோம்

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் இணைந்து காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அனைவரது வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர். சுதர்சன நாச்சியப்பன் வீட்டினை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

English summary
Hundreds of Cauvery delta former seized cong M.P. Sudarsanan Nachiyappan house in Chennai today.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 153 / 4, 49.4 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST  
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST