Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜெ. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்- பொங்கல் சபதம் எடுக்க மு. க. ஸ்டாலின் அழைப்பு!

Posted by:
Published: Friday, January 18, 2013, 11:48 [IST]

 Mk Stalin Slams Jayalalithaa

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ்ப் புத்தாண்டு (பொங்கல் நாள்) நாளில் திமுகவினர் சபதமேற்க வேண்டும் என்று அக்கட்சிப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் தி.மு.கவின் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறையின் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்க செம்மொழி என்கிற அங்கீகாரத்தை கருணாநிதி பெற்று தந்தார். சென்னையில் செம்மொழி பூங்கா என்கிற மிகப்பெரிய பூங்காவை உருவாக்கித் தந்தார். அந்த பூங்கா எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. மயிலை பகுதியில் தொல்காப்பிய பூங்கா மூடப்பட்டிருக்கிறது. திருவள்ளுவருக்கு ஸ்டிக்கரை ஒட்டி மறைத்த ஒரு ஆட்சி எதுவெனில் ஜெயலலிதாவின் ஆட்சிதான்.

கொடநாட்டிலே போய் இன்றைக்கு ஓய்வு எடுத்திருக்கக்கூடிய ஜெயலலிதா, தமிழ் மொழிக்கு கருணாநிதி ஆற்றிய பணியை கொச்சைப்படுத்துகிற வகையில் பேசிவருகிறார். விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவுக்கட்டுகிற வகையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் நாளில் தமிழர் நாம் கருணாநிதி தலைமையில் சபதமாக ஏற்போம் என்றார் அவர்.

English summary
DMK treasurer MK Stalin has slammed Jayalalithaa on anti - tamil actions.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.