Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நாமக்கல் மாவட்டத்துக்குள் டாக்டர் ராமதாஸ் நுழைய தடை கோரி மனு

Posted by:
Published: Friday, January 18, 2013, 13:20 [IST]

நாமக்கல்: சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் பேசிவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை நாமக்கல் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், பல்வேறு சாதி சங்கங்களை ஒன்றிணைப்பதாகக் கூறி தலித்துகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கலப்பு திருமணங்களை எதிர்த்துப் பேசி வருகிறார். இவரது இந்த நடவடிக்கை சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பதால் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ராமதாஸ் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழைய தடை கோரி சமூக நீதி அமைப்புகள் அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தன. இந்நிலையில் நாமக்கல்லில் சாதி சங்கங்களின் கூட்டத்தை நாளை ராமதாஸ் கூட்டியுள்ளார்.

ராமதாஸின் இந்தக் கூட்டத்தினால் சமூக அமைதிக்கு பங்கம் விளையும் என்பதால் அவர் மாவட்டத்துக்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித் தமிழர் பேரவை நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்

English summary
Dalit movements seeking ban to entry Dr Ramadoss into Namakkal District.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter