Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சென்னை கோட்டையான கொடநாடு! மலை ஏறி ஜெ.விடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற ஓ.பி.

Posted by:
Published: Friday, January 18, 2013, 11:38 [IST]

கொடநாடு: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கொடநாட்டில் முகாமிட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துப் பெற்றிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் இருந்தபடியே 'அரசு' நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.

வழக்கமாக சென்னை கோட்டையில் இருந்து கொண்டு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வாரோ அதே பணிகளை கொடநாட்டில் இருந்து செய்து கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் சாமிக்கு மாலை போட்டிருக்கும் தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவை கொடநாடு பங்களாவில் தனது மனைவியுடன் சென்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துப் பெற்றார்.

இதேபோல் கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரியின் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கட்டண சலுகைத் தொகையை ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa has shifted her office from chennai to Kodanaadu.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter