For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரம்பு கடந்து பேசக்கூடியவர் ராமதாஸ்...அதுக்காக தடை விதிப்பீங்களா?: கருணாநிதி காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர்தான் அதற்காக ஒரு மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் நுழையக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து நேற்றைய தினம் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர் என்பது உண்மை யென்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மாவட்ட ஆட்சியர்கள் அப்படிப்பட்ட உத்தரவினை பிறப்பித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இதை பார்க்கும் போது சுதந்திரம் பெற்ற இந்தியாவிலே இருக்கிறோமா, இந்திய அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பதே ஐயப்பாடாக உள்ளது.

இந்த ஆட்சியில் தான் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு, குண்டர் சட்டம் என்று பிடிக்காதவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடுத்து வருகிறார்கள். அதுவும் போதாதென்று இப்படியொரு நடவடிக்கை எடுப்பது சரியா என்று ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு வேளை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை மனதிலே கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டு வதற்காக இப்படியொரு நடவடிக்கையா என்பதும் புரியவில்லை. எனினும் ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கெதிராக மாவட்ட ஆட்சியர்களே சட்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு குறிப்பாக சில கட்சிகளின் தலைவர்களை மாவட்டத்திற்குள்ளே நுழையக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பது முறையல்ல. இந்த ஜனநாயக விரோத செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

திராவிடக் கட்சிகளே வேண்டாம் என்று சொல்லும் ராமதாஸ் இந்த கண்டக் குரலை ஏற்பாரா?

English summary
DMK leader Karunanidhi has condemned the ban on PMK founder DR Ramadoss entry to the Cuddalore District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X