Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற முடியாது: இலங்கை அறிவிப்பு

Posted by:
Published: Friday, January 25, 2013, 17:13 [IST]

கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்று அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இப்போது வரையிலும் முகாம்களிலும் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழும்தான் தமிழர்கள் வாழுகிற அவல நிலை உள்ளது.

தமிழர்களை மறு குடியமர்த்துவது மற்றும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் சரிவர நடைபெறவில்லை. தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்; தமிழர்களும் சிங்களர்களைப் போல சம அதிகாரம், சுய கவுரவத்துடன் வாழ வேண்டும்; அதற்கு முதல் படியாக தமிழர் பகுதிகளில் ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு எழுந்துள்ளது.

தமிழர் பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்களை திரும்பப்பெறுமாறு ‘போருக்குப் பிந்தைய படிப்பினை, ஒற்றுமை ஏற்படுத்தும் குழு' ராணுவத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை பரிசீலித்த ராணுவக் குழு, அதனை நிராகரித்துவிட்டது.

இலங்கைத் தீவில் எங்கெங்கு பாதுகாப்புத் தேவைகள் எழுந்துள்ளனவோ, அங்கே தொடர்ந்து பாதுகாப்புப் படைகளை நிறுத்திவைக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது' எனவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற உள்நாட்டுப் போரின்போது ராணுவமே அப்பகுதிகளை நிர்வகிப்பதற்கேற்ற வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Sri Lanka’s military on Thursday asked the Government to introduce its own rules to deal with civil wars, saying existing international humanitarian laws cover only State actors and not terrorist organisations.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
My Place My Voice
Kannan S on
Kannan S on
Kannan S on
Kannan S on