Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட 1,000 தமிழ் குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் நலத்திட்ட உதவி

Posted by:
Published: Friday, January 25, 2013, 14:13 [IST]

நாசரேத்: இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வழங்கப்பட்டன.

இலங்கையில் நடைபெற்ற போரில் அங்குள்ள தமிழர்கள் முற்றிலும் பாதிப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உடல் ஊனமுற்று உணவிற்குக் கூட சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களுடன் இணைந்த புதுவாழ்வுச் சங்கம், கனடா நாட்டின் நம்பிக்கையின் வாசல் ஊழியங்கள், இலங்கை இவாஞ்சலிகன் மிஷன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மல்லாவி, ஆகிய பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்றவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வைகள், டார்ச் லைட், புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கினர்.

 tn christian organization donates welfare assistance
ஒரு குடும்பத்திற்கு ரூ. 3000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் என ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அளிக்கப்பட்டன. இதற்கான விழாவை கிளிநொச்சி மாவட்ட காவல்துறை அதிகாரி எட்மண்ட் மகேந்திரா, இலங்கை ராணுவ அதிகாரி அப்ரீதின் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இந்த விழாவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களின் சார்பில் டாக்டர் அன்புராஜ், சகோ. அப்பாத்துரை, நம்பிக்கையின் வாசல் இலங்கை பிரதிநிதி ஜெயக்குமார், பாஸ்டர் அசங்கரத்னகாஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English summary
TN Christian organization has donated Rs 30 lakh worth welfare assistance to Lankan refugees,.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST