For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்டி கட்டிய தமிழன் பிரதமராவதை பார்க்க விரும்புகிறேன் என்று கமல் சொன்னது காரணமா?- விஜயகாந்த்

By Shankar
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு இத்தனை தடைகள் ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஸ்வரூபம் விவகாரம் முஸ்லிம்கள் பிரச்சினையாக மட்டுமே இருந்தவரை அமைதி காத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இப்போது பிரச்சினையில் அரசு தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் விஜய்காந்த் களமிறங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்தை விட்டே வெளியேறப் போவதாகக் கமல் கூறியுள்ளது என் மனதை வருத்தப்பட வைத்துள்ளது.

சினிமாவுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட மகா கலைஞனை தமிழக அரசு புண்படுத்திவிட்டது.

அவர் எங்கும் போகக் கூடாது. இந்த நெருக்கடிக்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த அரசு விளக்கியே தீர வேண்டும்.

கமல் ஹாஸன் தன் படத்தை ஆளுங்கட்சி தொலைக்காட்சிக்கு விற்க மறுத்தது காரணமா?

ஒரு விழாவில் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக அமர்வதை விரைவில் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னது காரணமா?

அல்லது அரசின் நெருக்கடிக்கு பணியாமல் சட்டத்தை நாடியது காரணமா?

இதனை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த அரசு," என்றார்.

மேலும், கமலை நேரில் சந்தித்து அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

English summary
Vijayakanth is extending his support to Kamal Hassan in Viswaroopam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X