For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

By Siva
Google Oneindia Tamil News

Abu Dhabi crown prince sits by roadside
துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா?

English summary
General Sheikh Mohammed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces was siting by the side of the road with a school girl untill her parents came to pick her up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X