For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நண்பர்கள் அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... உச்ச நீதிமன்றத்துக்கு போவதாக இல்லை!- கமல்

By Siva
Google Oneindia Tamil News

Kamal Hassan
சென்னை: என் திரையுலக நண்பர்கள் அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன், என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.

விஸ்வரூபம் இந்திப் பட வெளியீட்டுக்காக மும்பை செல்லும்போது, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாஸன்.

அவரிடம், இன்றே உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல், "என் நண்பர்கள் சிலர் அரசுடன் பேசி வருகின்றனர். நம்பிக்கை வார்த்தைகளைத் தந்துள்ளனர்.

எனவே நான் இப்போதைக்கு உச்சநீதிமன்றம் செல்லும் முடிவைத் தள்ளி வைத்துள்ளேன்.

அரசின் முடிவுக்காக பிப்ரவரி 6-ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளேன்.

இப்போது விஸ்வரூபம் இந்தி மற்றும் தமிழை வட இந்தியாவில் வெளியிடும் வேலைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது," என்றார்.

ஏற்கெனவே கமலுக்காக அரசுடன் ரஜினி பேசிக் கொண்டிருப்பது குறித்து நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த சூழலில் அரசியல் தலைவர்கள் வேறு இந்தப் பிரச்சினையில் தலையிட ஆரம்பித்திருப்பதால், எச்சரிக்கையாக அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளது கமல் தரப்பு.

English summary
Kamal Haasan wants to wait to see if a breakthrough is reached in those talks before he appeals to the Supreme Court to rescind the ban, which expires on Wednesday, February 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X