For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியா தேர்தலில் 'விக்கிலீக்ஸ்' ஜூலியன் அசாஞ்ச் போட்டி!

By Mathi
Google Oneindia Tamil News

Julian Assange
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 14-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜூலியர் கிலார்டு அறிவித்திருந்தார். அவர் அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் சமூக வலைதளத்தில், அசாஞ்ச் ஆஸ்திரேலியா தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் பதிவு செய்யப்பட்டது. அசாஞ்சின் முடிவை அவரது தாயார் வரவேற்றுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் உறக்கத்தை தொலைக்க வைத்தவர் அசாஞ்ச். பல நாடுகளின் ரகசியங்களை அம்லப்படுத்தியதால் அரசுகள் அவரை வேட்டையாடத் தொடங்கின. சுவீடனில் அவர் மீதான பாலியல் புகார் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அவர் கடந்த ஆண்டே விக்கிலீக்ஸ் கட்சி என்ற பெயரில் ஆஸ்திரேலியா தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும் தற்போது லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கும் அசாஞ்சை அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கு இங்கிலாந்து அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

English summary
WikiLeaks founder Julian Assange will run for a seat in the Australian Senate during this year's elections, his organisation announced Wednesday, with his mother saying he would be "awesome" in the role.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X