Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

எதிரணி வீரரை கெட்ட வார்த்தையால் திட்டிய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார்

Posted by:
Updated: Friday, February 8, 2013, 10:13 [IST]

 On Field Brawl Puts Praveen Kumar Hot Water

பிலாய்: தொழில்நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது வருமான வரித்துறை அணி வீரரைப் பார்த்து இந்தியில் மிகவும் அசிங்கமாகவும், கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் கடுமையாகப் பேசி பெரும் சர்ச்சையில் மாட்டியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார்.

இதுகுறித்து போட்டி நடுவர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.

தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. பிலாய் நகரில், வருமான வரித்துறை மற்றும் ஓஎன்ஜிசி அணிகள் இடையிலான போட்டி நடந்தது.

ஓஎன்ஜிசி அணியில் பிரவீன் குமார் இடம் பெற்றுள்ளார். ஓஎன்ஜிசி அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தது. வருமான வரித்துறை அணி பேட் செய்து கொண்டிருந்தது. அப்போது 48.1 ஆவது ஓவரின்போது திடீரென பிரவீன்குமாருக்கும், வருமான வரித்துறை வீரர் அஜீத் அர்கல் என்பவருக்கும் இடையே மோதல் மூண்டது.

அஜீத்தைப் பார்த்து இந்தியில் படு ஆவேசமாகப் பேசினார் பிரவீன் குமார். தகாக வார்த்தைகளால் அவர் கீழ்த்தரமாக,அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரவீன் குமார் பேசுவதைப் பார்த்து கோபமடைந்த நடுவர், பிரவீன் குமாரை கடுமையாக எச்சரித்தார். ஆனாலும் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அஜீத்தைப் பார்த்து அசிங்கமாக திட்டினார் பிரவீன் குமார்.

இதையடுத்து பிரவீன்குமார் மீது போட்டி நடுவர் தனஞ்செய் குமார் சிங் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அடிக்கடி கோபப்பட்டு வார்த்தைகளை விடுவது பிரவீன் குமாருக்குப் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரவீன்குமார் விளையாடும் தகுதியிலேயே இல்லை, அவரது மனநிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு சின்னக் காரணம் கிடைத்தாலும் அவர் கடும் கோபமடைந்து விடுகிறார் என்று கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் நடுவர் தனஞ்செய் குமார் சிங் தெரிவித்துள்ளாராம்.

Story first published:  Friday, February 8, 2013, 9:01 [IST]
English summary
India swing bowler Praveen Kumar landed in hot waters while representing ONGC in the BCCI's Corporate Trophy tournament being held in Bhilai. While bowling against Income Tax on February 4, Praveen (26), according to match officials, brutally abused an opposition batsman in Hindi during the 49th over of the innings. When the umpire admonished him, he repeated the abuse.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL