Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இந்திய வருகைக்கு எதிர்ப்பு எதிரொலி: டெல்லி வராமல் புத்தகயா சென்றார் ராஜபக்சே

Posted by:
Updated: Friday, February 8, 2013, 16:05 [IST]

கொழும்பு: மதிமுகவினர் டெல்லியில் போராட்டம் நடத்தியதை அடுத்து டெல்லி செல்லாமல் பிளானை மாற்றி புத்தகயா சென்று வழிபட்டார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

பீகார் மாநிலம் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் சென்று வழிபடுவதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லி சென்று பின்னர் புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க மதிமுகவினர் டெல்லியில் முகாமிட்டது தெரியவரவே பிளான் ‘பி' க்கு மாறினார் ராஜபக்சே.

 rajapakse changes his plan india visit
தலைநகர் டெல்லி செல்வதை ராஜபக்சே தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டக்கிற்கு சென்று அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பிகாரில் உள்ள புத்த கயா சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற ‘மகா போதி' புத்தர் ஆலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். அவருடன் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சென்று வழிபட்டார்.

கறுப்புக் கொடி காட்டிய எம்.எல்.ஏ

இதனிடையே பீகார் மாநிலத்தில் அதிபர் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. புத்தகயாவுக்கு சென்ற ராஜபக்சேவுக்கு அம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவான சோம்பிரகாஷ்சிங், தலைமையில் விமான நிலையத்தில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

புத்தயகா கோயிலும் சோம்பிரகாஷ் சிங் தலைமையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோம்பிரகாஷ்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்சேவை ஹிட்லராக அண்மையில் வர்ணித்திருந்தார் சோம்பிரகாஷ்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை திருப்பதி தரிசனம்

இன்று மாலை திருப்பதி செல்லும் ராஜபக்சே, அங்கிருந்து சாலை வழியாக திருமலைக்கு செல்கிறார். இரவு மலையிலேயே தங்குயிருக்கும் அவர் நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்கிறார். பின்னர் காலை ஒன்பது மணிக்கு சிறப்பு விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு செல்கிறார். ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Friday, February 8, 2013, 9:46 [IST]
English summary
Lankan president Rajapakse has changed his plan for his India visit after a series of agitations in India by Tamil parties and activists.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST