For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச வர்த்தகம்... அமெரிக்க ஆதிக்கத்தை உடைத்த சீனா!

By Shankar
Google Oneindia Tamil News

Shangai
பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது.

காரணம்... சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது.

2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இதன் மூலம் உலகின் மார்க்கெட் லீடர் என்ற புதிய அந்தஸ்து சீனாவுக்குக் கிடைத்துள்ளது.

"அமெரிக்காவின் பொருளாதார அளவில் ஒரு சிறு பகுதிதான் சீனாவுடையது. ஆனால் அவர்கள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியிருப்பது சாதாரண சாதனை அல்ல...", என்று கருத்து தெரிவித்துள்ளார் வாஷிங்டனில் உள்ள பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் நிபுணர் நிகோலஸ் லார்டி.

உலக வங்கி கணக்கின்படி, பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அமெரிக்காவை விட சீனா பெரிய நாடுதான் என்றாலும், பொருளாதாரத்தில் சீனாவை விட இருமடங்கு பெரியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

2012-ம் ஆண்டு சேவை வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு உபரியாக 193 பில்லியன் டாலர் கிடைத்தது. சரக்கு வர்த்தகத்தில் 700 பில்லியன் டாலர் பற்றாக்குறை விழுந்துள்ளது.

ஆனால் சீனாவுக்கோ சரக்கு வர்த்தகத்தில் 231 பில்லியன் டாலர் உபரி கிடைத்துள்ளது.

ஜிடிபி எனும் மொத்த உற்பத்தி அளவில் பார்த்தால் அமெரிக்கப் பொருளாதாரம் 15 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையது. சீனாவோ 7.3 ட்ரில்லியன்தான்!

ஆனாலும் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது ஜிடிபியை உயர்த்தத் திட்டமிட்டுள்ள சீனாவின் வளர்ச்சி விகிதம் 1978லிருந்து சராசரியாக 9.9 என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
China surpassed the U.S. as the world's largest trader of goods in 2012, government statistics from both countries show. America's imports and exports of goods last year amounted to $3.82 trillion, the U.S. Commerce Department reported on Friday, while China's total trading of goods last year amounted to $3.87 trillion, the country's customs administration reported in January.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X