Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விளம்பரத்திலிருந்து சச்சினை தூக்கிய பூஸ்ட்!

Posted by:
Updated: Tuesday, February 12, 2013, 11:18 [IST]

சென்னை: சச்சின், ஷேவாக், டோணியின் காலம் மலையேறி விட்டது. இது இளைஞர்களின் காலம் என்பதை நிரூபிப்பது போல பூஸ்ட் நிறுவனம் தனது அடுத்த விளம்பர ஸ்டாராக விராத் கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளது. இனி பூஸ்ட் விளம்பரங்களை விராத்தான் அலங்கரிக்கப் போகிறார்.

இந்த ஆண்டு விராத் கோஹ்லிக்கு உண்மையிலேயே பூஸ்ட்டான ஆண்டுதான். மிகப் பெரிய அங்கீகாரமாக அவருக்கு பூஸ்ட் நிறுவன பிராண்ட் அம்பாசடர் பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது.

ஒரு காலத்தில் பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்றார் கபில்தேவ். பின்னர் அவர் எனர்ஜி என்று சச்சினும் அவருடன் இணைந்தார். அதற்குப் பிறகு ஷேவாக். கடைசியாக வந்தவர் டோணி. இப்போது கோஹ்லி புகுந்துள்ளார்.

 boost unveils virat kohli as the next
இவர்களில் சச்சின்தான் ரொம்ப காலமாக பூஸ்ட் விளம்பரத்தில் இருந்து வந்தவர். அதேபோல ஷேவாக்கும், டோணியும் நீண்ட காலமாக இதில் இருந்து வந்தவர்கள்தான்.

விராத் கோஹ்லியை பூஸ்ட் நிறுவனம் அடுத்த கிரிக்கெட் ஸ்டாராக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கோஹ்லியை தனது அடுத்த ஸ்டாராக அறிவித்தது பூஸ்ட்.

விராத் கோஹ்லியை பூஸ்ட் நிறுவனம் நாடு முழுவதும் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Monday, February 11, 2013, 18:02 [IST]
English summary
Starting the New Year on a high, choco-malt drink Boost has announced cricketer Virat Kohli as their new brand ambassador. With this endorsement, Virat joins the league of other Boost superstars such as Sachin Tendulkar, Virender Sehwag and Mahendra Singh Dhoni who have been associated with the brand for a long time.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST