
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் வணிக வளர்ச்சி துறை பொது மேலாளர் செல்வன் ராஜதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கான சிஆர்ஆர் மற்றும் ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகியவற்றின் வட்டி விகிதத்தில் 25 பேசிஸ் பாயிண்ட் குறைத்துள்ளதன் காரணமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் தனது பேஸ் ரேட்டில் அதே அளவுக்கு குறைத்துள்ளது. எனவே தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பேஸ் ரேட் 11 சதவீதத்தில் இருந்து 10.75 சதவீதம் ஆக குறைகிறது. மேலும் பிஎல்ஆர் 16.75 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதம் ஆகவும், 11.02.2013 முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் முலம் மெர்க்கன்டைல் வங்கியின் பேஸ் ரேட்டுடன் இணைந்துள்ள அனைத்து கடனாளிகளும் இதில் பயன்பெற முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















