Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கன்னியாகுமரியில் படகுக் கட்டணம் அதிகரிப்பு

Posted by:
Published: Wednesday, February 13, 2013, 12:53 [IST]

 Fee Boat Ride Kanniyakumar Go High

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகுகளுக்கான கட்டணம் இன்று முதல் உயருகிறது.

குமரியில் சுற்றுலா பயணிகளி்ன் வசதிக்கான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, பாகிரதி ஆகிய மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு சுற்றுலா பயணிகளுக்கான சேவை வரியை சமீபத்தில் 12.36 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதையடுத்து படகுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை சுற்றுலா பயணி ஒருவருக்கு ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.34 ஆகவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.17 ஆகவும் சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.169 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையே ரூ.1 கோடி மதிப்பில் தயாரான புதிய படகு இன்று குமரிக்கு வருகிறது.

English summary
Pooumpuhar shipping corporation has hiked the ticket fare for boat ride in Kanniyakumari.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST