Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு 'அட்வைஸ்' தர வருவாரா முஷ்டாக் அகமது?

Posted by:
Published: Wednesday, February 13, 2013, 14:49 [IST]

 Mushtaq Yet Confirm Ipl Deal With Delhi

லாகூர்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பந்து வீச்சு ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமது வருவாரா என்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது.

தான் பந்து வீச்சுப் ஆலோசகராகப் பொறுப்பேற்பது குறித்து இன்னும் உறுதிபடத் தெரிவிக்கவில்லையாம் முஷ்டாக் அகமது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவி்ல் எதிர்ப்புகள் இருந்து வருவதால் இங்கு வருவதற்கு முஷ்டாக் யோசிப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இருப்பினும் ஏற்கனவே முஷ்டாக் அகமது ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை முறைப்படி அறிவிக்காமல் இரு தரப்பும் அமைதியாக இருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறுகையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட முஷ்டாக் சம்மதம் தெரிவித்து விட்டார். ஒப்பந்தம் கூட போடப்பட்டு விட்டது. இருப்பினும் இதுகுறித்து வெளிப்படையாக தெரிவிக்காமல் இரு தரப்பும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து முஷ்டாக் கூறுகையில், டெல்லி அணிக்குப் பயிற்சி தருவது சவாலான பணியாகும். விரைவில் இதுதொடர்பான பேச்சுக்கள் முடிவு பெறும் என்றார்.

ஐபிஎல் அணிக்கு பாகிஸ்தான் வீரர் ஒருவர் பயிற்சியாளராவது இது முதல் முறையால்ல. இதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக வாசிம் அக்ரம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Pakistan Test leg-spinner Mushtaq Ahmed has signed a deal with IPL side Delhi Daredevils to work as their bowling consultant but has not made it public due to the recent backlash in India over the presence of Pakistani sportsmen there, sources said on Tuesday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST