Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காதல் தலைநகரம் டில்லி! – சர்வே ரிசல்ட்

Posted by:
Published: Thursday, February 14, 2013, 9:08 [IST]

 Delhi Voted Love Capital

டெல்லி: இந்தியாவின் காதல் நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சர்வேயில் இந்த புதிய அந்தஸ்து டெல்லிக்கு கிடைத்துள்ளது.

காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எந்த நகரம் காதல் நகரமாக கருதப்படுகிறது என்று snapdeal.com என்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் சர்வே நடத்தியது.

இந்த சர்வேயில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட நான்கரை லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த சர்வேயில் டெல்லியை 53 ஆயிரத்து 174 பேர் காதல் நகரமாக தேர்வு செய்துள்ளனர். மும்பைக்கு 49 ஆயிரத்து 010 பேரும், ஸ்ரீநகருக்கு 29 ஆயிரத்து 047 பேரும் வாக்களித்துள்ளனர்.

எல்லோரும் நேசிக்கிறாங்க

காதல் நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டது பற்றி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், டெல்லியை அனைவரும் நேசிக்கின்றனர். இங்குள்ள வெளிமாநிலத்தவரும் இதை தங்கள் சொந்த மண் போல் நேசிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 4ம் தேதி முதல் நடைபெற்ற இந்த சர்வேயில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைவாகவே வாக்களித்துள்ளனர். வட இந்தியர்கள் குறிப்பாக டெல்லிவாசிகள் இணையதளத்திற்கு சென்று அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
The national capital today got tagged as the “Most Lovable city of India” in an online campaign which saw voting by noted personalities from Bollywood, sports, theatre and literature.The city garnered maximum votes in a special Valentine’s Day campaign ‘My Love Capital’ initiated by an online shopping website, Snapdeal.com, which handed over a trophy and a collage with photographs of the voters to Chief Minister Sheila Dikshit here today.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs