ஜம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 35 வயது பெண்ணை மர்ம நபர்கள் கற்பழித்து தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள டிம்னா ஏரி அருகே 35 வயது பெண்ணின் தலையை துண்டித்து மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் நிர்வாண உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. அவரை மர்ம நபர்கள் கற்பழித்துவிட்டு கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





















