Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கேரளா- கர்நாடகா எல்லைப் பகுதியில் காலூன்றும் மாவோயிஸ்டுகள்

Posted by:
Published: Thursday, February 14, 2013, 11:30 [IST]

கண்ணூர்: கேரள மாநிலத்தில் கர்நாடகா எல்லையோரத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை உறுதி செய்திருப்பதாக கண்ணூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வனப்பகுதிகளில் அங்கு தீவிர தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கண்ணூர் போலீஸ் எஸ்.பி. ராகுல் நாயர் கூறுகையில், கேரள- கர்நாடகா எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்றார். மேலும் கண்ணூரில் கர்நாடகா எல்லை மற்றும் வயநாடு மாவட்டப் பகுதிகளுக்கும் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து கேரளா- கர்நாடகா இரு மாநில போலீசாரும் இணைந்து எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவல்களின்படியே மாவோயிஸ்டுகளின் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

English summary
Police on Wednesday confirmed the presence of Maoists along the Kerala-Karnataka border, but said the exact number of persons in the group and the type of weapons used by them was yet to be ascertained.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.