
கொழும்பு: இலங்கையில் மீறப்பட்ட மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்காக தமது ஆண்டறிக்கையை நவநீதம்பிள்ளை தாக்கல் செய்திருக்கிறார்.
இதில் இலங்கை தொடர்பாகவும் 19 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில். சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப இலங்கையில் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி கூடுதல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்
இலங்கையின் போரின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சட்டங்களை கடுமையாக்குதல், சித்திரவதைகள் போன்ற விவகாரங்களில் சர்வதேச அளவிலான நடவடிக்கையை மேற்கொள்ளுதல்,
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இதன் வழியே உள்நாட்டு விசாரணைகளை வழிநடத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.


















