Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தொடரும் தூக்குகள்.. ஒவ்வொரு விடியலும் நடுங்க வைக்கிறது: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்

Posted by:
Published: Thursday, February 14, 2013, 17:28 [IST]

 Continue Hanging We Afraid Every

சென்னை: அஜ்மல் கசாப், அப்சல் குருவைத் தொடர்ந்து 4 தமிழர்களுக்கு தூக்கு என்ற நிலையில் தங்களது பயம் அதிகரித்து இருக்கிறது என்று ராஜிவ் வழக்கில் தூக்கை எதிர்நோக்கியிருக்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தொடர்ச்சியான தூக்கு தண்டனை நிறைவேற்றங்களால் ஏற்கனவே இருந்த பயம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. என் மகனுக்கு நீதி வழங்கப்படும் என நம்புகிறேன்..

கடந்த 22 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், 12-ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கின்றார். அவர் சிறையில் உள்ள பிற கைதிகளின் வாழ்க்கையை சீர்திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. இவர்களது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் கருணை மனுவை நீண்டகாலத்துக்குப் பின்னர் நிராகரித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

English summary
Perarivalan's Mother said their family now a days so afraid after the continue hanging.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.