
சென்னை: இப்போதெல்லாம் தன்னை யாருமே எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்று இயக்குனர் சீமான் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சீமான் சுவாசமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
என்னை இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்த சுவாசமே குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதெல்லாம் யாருமே என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. தமிழ் சினிமா துறை என்னை மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆர்வலராக இருப்பதால் ஒருவர் பிறருக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி ஆகிய படங்களை இயக்கிய சீமான் தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து ஈழத் தமிழ் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















