Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அடுத்தபடியாக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுக்கு 'குறி' வைக்கும் அதிமுக

Posted by:
Published: Thursday, February 14, 2013, 14:42 [IST]

 Now Admk Targets Dmdk Secretaries

சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்களைத் தொடர்ந்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களையும் வளைத்துப் போட அதிமுக ரெடியாகிவிட்டது. அதுவும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மதுரை மாவட்டத்தில்தான் முதலில் கை வைக்கிறது அதிமுக.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரை தம்மை சந்திக்க வைத்து தேமுதிக (ஜெ) அணியை உருவாக்கினார் முதல்வர் ஜெயலலிதா. அந்த அணியின் திட்டக்குடி தமிழழகன், சட்டசபையில் தம்மை புகழ்ந்து தள்ளியதை விழுந்து விழுந்து ரசித்தார் ஜெயலலிதா. அன்றைக்குத்தான் தேமுதிகவின் எம்.எல்.ஏக்களுக்கு இடையே அடிதடி அரங்கேறியது.

தற்போது சட்டசபையில் அடிவாங்கிய மைக்கேல் ராயப்பனுக்கு மிக நெருக்கமானவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான அரவிந்தனை முன்வைத்து மாவட்டச் செயலாளர்களை வளைக்க அதிமுக திட்டமிட்டிருக்கிறது.

மைக்கேல் ராயப்பனை தேமுதிக எம்.எல்.ஏக்கள் தாக்கியதால் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்தன். இதை விஜயகாந்தும் ஏற்று மாவட்டப் பொருளாளராக இருந்த டி.சிவமுத்துக்குமாரை நியமித்தார்.

இந்த அரவிந்தனை வைத்து மேலும் சில மாவட்டச் செயலர்களை வளைப்பதில் அதிமுகவும் தேமுதிக (ஜெ) அணியும் மும்முரமாக இருக்கின்றனவாம்!

English summary
After MLAs now ADMK targets DMDK distritc secretaries for their camp.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs