மேட்டூர்: வீரப்பன் வேட்டையின் முக்கிய சம்பவங்களில் ஒன்றுதான் இந்த பாலாறு குண்டுவெடிப்புச் சம்பவம். காவல்துறையினரால் என்றென்றைக்கும் மறக்க முடியாத மிகப் பயங்கரமான தாக்குதல் சம்பவம் இது. வீரப்பனின் கோரமுகத்தை வெளியுலகம் பார்த்து பயந்து போன கருப்புச் சம்பவம் அது.
1993ம் ஆண்டு பாலாறு வனப்பகுதியில் வீரப்பனும் அவனது ஆட்களும் போலீஸார் 21 பேரை கூண்டோடு கொளுத்திப் போட்ட சம்பவம்தான் இது. கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி தமிழக ஐஜி கோபாலகிருஷ்ணன் படுகாயத்துடன் தப்பினார். ஆனால் அவருடன் வந்த 21 போலீஸாரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த தினம் அது.
4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கர்நாடக கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் அதை எதிர்த்து அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு அது தூக்குத் தண்டனையாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து நான்கு பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அதைத்தான் தற்போது பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
பாலாறு குண்டுவெடிப்பு குறித்த ஒரு ரீவைண்ட்...



























