Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கேரளாவில் மீடியா ஒன் டிவி துவக்கம்: குஷியில் சவூதி வாழ் சேட்டன், சேச்சிகள்

Posted by:
Published: Thursday, February 14, 2013, 8:22 [IST]

 Mediaone Tv Launch Excites Gulf Indians

ஜுபைல்: கேரளாவில் மீடியா ஒன் டிவி என்னும் மலையாள சேனல் துவங்கப்பட்டுள்ளது சவூதியில் வாழும் கேரள மக்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது.

கேரளாவில் பிரபலமான மாதியமம் நாளிதழின் மாதியமம் பிராட்காஸ்டிங் மீடியா ஒன் டிவி என்னும் புதிய சேனலை கடந்த 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு துவங்கியது. இந்த சேனல் துவக்க விழாவில் கலந்து கொண்டு புதிய சேனலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி துவங்கி வைத்தார்.

முன்னதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி துவக்க உரை நிகழ்த்தினார். கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஸ்டுடியோ வளாகத்தை திறந்து வைத்தார். தொழில்துறை அமைச்சர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி செய்திகளுக்கான ஸ்டுடியோவை திறந்து வைத்தார்.

இந்த புதிய சேனல் துவங்கப்பட்டது சவூதி வாழ் கேரள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சவூதி ஜுபைலில் உள்ள இன்டர்கான்டினன்டல் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மீடியா ஒன் டிவி சேனல் பற்றி உரை நிகழ்த்தினர். மீடியா ஒன் டிவியின் ஜுபைல் தலைவர் அக்பர் பேசுகையில், இந்த புதிய சேனல் சமய நல்லிணக்கம் மற்றும் மதிப்பு அடிப்படையிலான ஊடக கலாச்சாரத்தை ஊக்கிவிக்கும். வியாபாரத்திற்காக இதை துவங்கவில்லை என்றார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முகமது கூறுகையில், மீடியா ஒன் குடும்பத்தோடு பார்க்கும் மலையாள சேனலாக இருக்கும். இதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பப்படும். இது முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் ஏற்ற சேனலாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மீடியா ஒன் சேனலின் லோகோவை அக்பர் வெளியிட்டார்.


English summary
Malayalees in Saudi Arabia celebrated the launch of Media One satellite TV channel in their home state Kerala.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter