Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

உக்ரைனில் கால்பந்தாட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் சென்ற விமானம் தரையில் மோதி விபத்து: 5 பேர் பலி

Posted by:
Updated: Thursday, February 14, 2013, 12:48 [IST]

கீவ்: உக்ரைனில் கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் சென்ற விமானம் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

உக்ரனைனின் ஒடேஸாவில் இருந்து 44 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் சதர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏஎன்-24 என்ற விமானம் நேற்று டோனெட்ஸ்க் நகருக்கு கிளம்பியது. அந்த விமானம் தரையிறங்குகையில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்றது. இதில் விமானம் தலை கீழாக பிரண்டதில் 5 பேர் பலியாகினர்.

உடனே விமானத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. பயணிகளில் பெரும்பாலானோர் டோனெட்ஸ்கில் நடக்கும் யுஇஎஃப்ஏ சாம்பியன் லீக் போட்டிகளில் ஷக்தர் டோனெட்ஸ்க் மற்றும் பொரஸ்யா டார்ட்மன்ட் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காணச் சென்றவர்கள்.

Story first published:  Thursday, February 14, 2013, 12:09 [IST]
English summary
A passenger plane crash landed in the eastern Ukrainian city of Donetsk on Wednesday, killing five people.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST