For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் எரி நட்சத்திரம் விழுந்து வெடித்து சிதறியது; மாபெரும் வெடிப்பு, அதிர்வு- 500 பேர் படுகாயம்!

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.

வானிலிருந்து பயங்கர வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை நெருங்கும்போதே வெடித்துச் சிதறியது. அப்போது மிக பயங்கரமான வெடிச் சத்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததோடு கடும் அதிர்வும் உண்டானது.

இந்த வெடிப்பின்போது பல வீடுகளின் கூரைகள் நொறுங்கி விழுந்தன, ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன.

இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையே நொறுங்கி விழுந்துவிட்டது. இந்த சம்பவங்களில் 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் விழுந்து சிதறிய எரி நட்சத்திரம்- வீடியோ

<center><center><center><center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="1" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /> <div id="vnVideoPlayerContent"></div> <script> var ven_video_key="MTIxMDIwfHwyfHwxfHwxLDEsMQ=="; var ven_width="650"; var ven_height="417"; </script> <script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center></center></center></center>

ஏவுகணையை வைத்து ரஷ்யா தாக்கி சிதறடித்ததா?:

ரஷ்யாவின் மீது விழ இருந்த பெரிய எரிகல்லை அந் நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதில் அது சிதறி விழுந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.

English summary
A meteor streaked across the sky above Russia's Ural Mountains today morning, causing sharp explosions and injuring more than 400 people, many of them hurt by broken glass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X