Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டெல்லிக்கு நேரம் சரியில்லை... ஆண் கவுன்சிலர்கள் 'சில்மிஷம்' செய்வதாக பெண் கவுன்சிலர்கள் புகார்

Posted by:
Published: Monday, February 18, 2013, 14:31 [IST]

டெல்லி: டெல்லி மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள் பரபரப்புப்புகாரைத் தெரிவித்து தலைநகரை கலங்கடித்துள்ளனர். அதாவது ஆண் கவுன்சிலர்கள் தங்களிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், பாலி்யல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறுகின்றன. குறிப்பாக பாலியல்பலாத்காரம் நாட்டிலேயே இங்குதான் அதிகம் உள்ளது. டெல்லியில்ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் சீரழித்து சாலையில் வீசி்ச் சென்றது.பின்னர் அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மனதிலிருந்து இன்னும் கூட அகலவில்லை.

இந்த நிலையில் டெல்லி மாநகராட்சியின்பெண் கவுன்சிலர்கள், ஆண் கவுன்சிலர்கள் தங்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சிக் கட்டடத்திற்குள் வைத்தே தங்களை ஆண் கவுன்சிலர்கள் அசிங்கப்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் டெல்லி துணை நிலை ஆளுநருக்குப் புகார் அனுப்பியுள்ளனர்.

அதில், மாநகராட்சிக் கூட்டத்திற்கு வரும்போது சில ஆண் கவுன்சிலர்கள், பெண் கவுன்சிலர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். பாலியல் சில்மிஷத்தில்ஈடுபடுகிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள்,கமெண்ட் அடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மேயர் ரஜினி அப்பி தலைமையில் பெண் கவுன்சிலர்கள் இந்தப் புகாரை சுமத்தியுள்ளனர். வடக்கு டெல்லி மாநகராட்சியிலும் இதேபோன்ற பிரச்சினை வெடித்துள்ளது.

English summary
The issue of women's safety in Delhi has been in the limelight after the brutal gangrape of a 23-year-old girl in a moving bus in the heart of national capital on December 16, 2012, and after a man shoved an iron rod down a 19-year-old girl's throat for resisting rape in Delhi.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs