Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜேட்லி போன் தகவல்களை சேகரித்த 4 பேர் கைது.. ஒருவர் போலீஸ்காரர், மற்ற 3 பேரும் டிடெக்டிவ்கள்!

Posted by:
Updated: Tuesday, February 19, 2013, 16:26 [IST]

 Four Arrested Bid Get Arun Jaitley Cellphone Records

டெல்லி: பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லியின் போன் தகவல்களை பெற்றது தொடர்பான விவகாரத்தில் இதுவரை 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் போலீஸ்காரர். மற்ற 3 பேரும் தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சர்வதேச சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

நாடாளுமன்ற சாலை காவல்நிலையத்தில் போலீஸாகப் பணிபுரிந்தவர் அரவிந்த் தப்பாஸ். இவர், தனது மேலதிகாரியின் இ-மெயில் முகவரியைப் பயன்படுத்தி, அண் ஜேட்லியின் தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள் குறித்த தகவலை அனுப்பும்படி தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு முறைகேடாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது குறித்து ஜேட்லி புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தப்பாஸைக் கைது செய்து விசாரித்தனர்.

இவரிடம் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் தற்போது தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைதாகியுள்ளனர். இவர்களிடம் நடத்தப்ட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 12 அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு

ஜேட்லி தவிர மேலும் 12 அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை இந்தக் கும்பல் சேகரித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே இதில் மிகப் பெரிய சதி வேலை அடங்கியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களின் பின்னணியில் உள்ளது யார், எதற்காக தகவல் சேகரிக்கப்பட்டது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Story first published:  Tuesday, February 19, 2013, 14:40 [IST]
English summary
Four people have been arrested by the Delhi Police for trying to access the cellphone records of BJP leader Arun Jaitley. The first arrest over the weekend was of a Delhi constable named Arvind Dabas; after that, three private detectives have been arrested. The police says that in recent weeks, the same gang tried to access the cellphone records of at least 12 politicians, telegraphing "a larger conspiracy."
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs