கலை பொக்கிஷங்களின் ஏலம்:
இவரது மகன் சிவராஜ் சிங் கடந்த 2005ம் ஆண்டு போலோ விளையாட்டின்போது தலையில் கடுமையாக காயம் அடைந்ததையடுத்து இந்த அறக்கட்டளையை அவர் துவக்கி, தனது சொந்தப் பணத்தில் நாடு முழுவதும் தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வழியில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி வருகிறார்.
இந் நிலையில் இந்த அறக்கட்டளைக்கு நிதி திரட்ட ஜோத்பூர் மெஹ்ரான்கர்க் அரண்மனையில் அடுத்த மாதம் 8ம் தேதி மாபெரும் கலை பொக்கிஷங்களின் ஏலம் நடக்கவுள்ளது.
ரூ. 7,500 கோடி வரை நிதி திரட்ட...
இந்த ஏலத்தில் பண்டை கால ஓவியங்கள், நகைகள், சிற்பங்கள், நாற்காலிகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்ட படைப்புகள் ஏலம் விடப்படவுள்ளன.
ஒரு கலைப் பொருளின் அடிப்படை விலையும் ரூ. 50 கோடியாகும். கிட்டத்தட்ட 150 பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளன. இதன்மூலம் குறைந்தபட்சம் ரூ. 7,500 கோடி வரை திரட்ட முடியும் என்று கருதப்படுகிறது.
அம்பானி, இளவசரர் ஆண்ட்ரூ, சுனிதா:
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா, ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், தொழிலதிபர்களான கே.பி.சிங், சுனிதா ரெட்டி, அதுல் புஞ்ச், பிரமித் ஜவேரி, சஞ்சய் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் இங்கிலாந்து இளவசரர் ஆண்ட்ரூ, பிரான்ஸ் பில்லியரான பாட்ரிக் குர்ரான்ட் ஹெர்மிஸ், அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் பாரஸ்ட் ஸ்டீவன் விடேகர், இங்கிலாந்து எழுத்தாளர் ஜெமீமா கான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஏலத்தையொட்டி இங்கிலாந்து பாடகர் ஸ்டிங்கின் இசை நிகழ்ச்சியும், கைவினைப் பெருட்கள் கண்காட்சியும், யோகா பயிற்சிகளும் நடக்கவுள்ளன.
தலை காயத்தால் 15 லட்சம் பேர் பாதிப்பு:
இந்தியாவில் வருடந்தோறும் 15 லட்சம் பேர் தலையில் காயமடைகின்றனர். இதில் 6ல் ஒருவர் மரணமடைந்துவிடுகிறார். இந் நிலையில் தான் இந்த அறக்கட்டளையைத் துவக்கி உதவும் பணிகளில் தொழிலதிபர்களையும் ஈடுபடுத்தவுள்ளார் மகாராஜா கஜ் சிங்.
உண்மையிலேயே இவர் 'மகா' ராஜா தான்!!