Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

உ.பி.யில் துப்பாக்கி முனையில் 30 வயது பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்த 4 பேர்

Posted by:
Published: Tuesday, February 19, 2013, 14:00 [IST]

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கற்பழித்து அதை வீடியோவும் எடுத்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது சிக்ரி கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நௌஷத், பிரவைஸ், கமல் ஹசன், நாசர் ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

அந்த 4 பேர் துப்பாக்கி முனையில் அப்பெண்ணை கற்பழித்து அதை வீடியோ எடுத்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.

பதேரி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த 28 வயது பெண் தன்னுடைய மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். அவரை மைத்துனரே கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது.

English summary
Four person allegedly gangraped a 30-year-old woman at gunpoint and also made a video clip of her at Sikri village in Uttar Pradesh's Muzaffarnagar district, police said on Monday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI
NET Vs SA - Only ODI at VRA Ground Fri 31st May ODI
ENG Vs NZ - 2nd ODI at The Ageas Bowl Sun 2nd Jun ODI