Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'சச்சினுடன்' கிரிக்கெட் விளையாடி அவுட் ஆன டேவிட் கேமரூன்

Posted by:
Updated: Tuesday, February 19, 2013, 15:07 [IST]

மும்பை: இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், மும்பையில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ள கேமரூன், பிரிட்டிஷ் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்த கேமரூன் தானும் விளையாட விரும்பினார்.

 pm cameron plays cricket mumbai

முதலில் அவருக்கு மாணவி ஒருவர் பவுலிங் செய்தார். அடுத்ததாக, கேமரனுக்கு பவுலிங் செய்த சச்சின் என்ற சிறுவன், அவரை கிளீன் போல்டு செய்தார்.

பரபரப்பான சூழ்நிலையில் கேமரூனுக்கு சிறிது நேரமே கிடைத்தது. இதில் சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடிய அவர் சிறிது நேரத்திலேயே அவுட் ஆனதால், பவுலிங் செய்த சிறுவனிடம் வந்து கைகொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு கிளம்பினார்.

Story first published:  Tuesday, February 19, 2013, 15:06 [IST]
English summary
Prime Minister David Cameron currently on a trade mission in India, produced a couple of stylish cover drives while being filmed playing cricket with children in a local park in Mumbai this week.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs