Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜெ. 4 தொகுதிகளில் போட்டியிட்ட வழக்கு...தள்ளிவைப்பு

Posted by:
Published: Tuesday, February 19, 2013, 17:57 [IST]

சென்னை: கடந்த 2001ம் ஆண்டு நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்ட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதா அப்பீல் செய்தார்.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும். தேர்தல் அதிகாரியிடம் விரிவான விளக்கத்தை கேட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 28-ந்தேதிக்கு வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

English summary
Madras HC has adjourned the case on Chief Minister Jayalalitha.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 178 / 4, 58.4 Overs