Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'கடலை' ராமலிங்கத்திற்கு 6வது முறையாக முன்ஜாமீன்

Posted by:
Updated: Tuesday, February 19, 2013, 14:06 [IST]

 Madras Hc Grants 6th Advance Bail Ramalingam

சென்னை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலலிங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

தாராபுரம் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கடலை வியாபாரியான இவரது வீட்டில் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ரூ. 27 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான அமெரிக்க பத்திரங்கள் சிக்கின. அவற்றை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைக்கு ராமலிங்கத்தை சென்னை வரவழைத்தனர்.

இதையடுத்து அவர் சென்னை சென்று விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் மறு தேதி குறிப்பிடாமல் விசாரணையை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றப்பட்ட பத்திரங்கள் போலியானவை என்ற தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெட்டி விளம்பரத்துக்காக ராமலிங்கம் இப்படி போலி பத்திரங்களை வைத்திருந்ததாக கூறி அவர் மீ்து வருமான வரித்துறையினர் வழக்குத் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கினார் ராமலிங்கம்

அடுத்தடுத்து 5 முறை முன்ஜாமீன் வாங்கினார் ராமலிங்கம். நேற்று இந்த முன்ஜாமீன் முடிவடைந்தது. இதையடுத்து மீ்ண்டும் முன்ஜாமீின் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார் ராமலிங்கம். அதை ஏற்ற உயர்நீதிமன்றம் 6வது முறையாக ராமலிங்கத்திற்கு முன்ஜாமீ்ன் வழங்கியது

Story first published:  Tuesday, February 19, 2013, 12:43 [IST]
English summary
Madras HC has granted advance bail to Dharapuram Ramalingam for 6th time.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter