Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை கலெக்டராக சுந்தரவள்ளி நியமனம்

Posted by:
Published: Tuesday, February 19, 2013, 15:22 [IST]

 Senior Ias Officers Transferred Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கலெக்டராக சுந்தரவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதுவரை வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஆவார். இப்போது சென்னை மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி முன்னாள் கலெக்டர் பூஜா குல்கர்னி, தொழில்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல அரசு கேபிள் டிவி பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி அந்த துறையின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரிய பொது மேலாளர் லதா, கோவை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பொது மேலாளர் சரவண வேல்ராஜ், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இணை மேலாண் இயக்குனர் சுப்பையன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரிய மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி முன்னாள் கலெக்டர் பூஜா குல்கர்னி, தொழில்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நில அளவைத்துறை கமிஷனராக இருந்த டாக்டர் ஆர்.கண்ணன் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த ரமேஷ்ராம் மிஸ்ரா நில அளவைத் துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் தங்க கலியபெருமாள் வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் கண்ணகி பாக்கியநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிராவிடர் நலத்துறை ஆணையராக இருந்த சிவசங்கரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பஷீர் அகமத், சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை செயலாளராக இருந்த அசோக் டோங்ரே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல பொருளாதாரம், உள்துறை, மதுவிலக்கு, புள்ளியியல், மற்றும் கலால்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Senior IAS officers have been transferred in Tamil Nadu. Sundaravalli is appointed as new Chennai collector
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers: 74 / 0, 9 Overs
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs