அரிசோனா: உடல் உறுப்புகள் நன்றாக இருப்பவர்களே சாதிக்க பல்வேறு தடைகளை சந்திக்கும் நிலையில் இரண்டு கைகளும் இன்றி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண்.
அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார்.
சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், தற்போது மன உறுதியுடன் வளர்ந்து வந்தார்.























