For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊளுந்தூர்பேட்டையில் வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்: 2 வாலிபர்கள் சாதனை

Google Oneindia Tamil News

Youths set up windmill
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் மின்வெட்டு ஏற்பட்டுகிறது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை வாங்கி வேண்டா வெறுப்பாக பயன்படுத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்களோ மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியனுக்கு படித்தவர். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருபவர். இவர்கள் இருவரும் சேர்ந்து காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் அதையும் அவர்களே உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்தனர்.

இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினர். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர்.

மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது. அதிலிருந்து வரும் ஒரு மின் கம்பி பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது.

இதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் தன் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்.

இதனால் மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த அவர் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் மாதம் ரூ. 200 வரை மட்டுமே கட்டுவதாக கூறப்படுகின்றது.

மேலும், கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர் இந்த சாதனை மனிதர்கள்.

சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து ஆச்சயர்த்துடன் பார்த்து செல்கின்றனர்.

இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் என பல்வேறு சாதனங்களை அதிக அளவு விலை கொடுத்து வாங்குதை விட ரூ. 6,000 மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை பயன்படுத்தி அனைவரின் வீடுகளிலும் மின்சாரம் தயாரித்து பயன்படுத்தலாமே.

English summary
Two youths from Ulundurpet in Villupuram district set up a windmill in their house at a cost of Rs. 6,000. The power generated by this windmill is used in their houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X