For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 ஆண்டுகளில் 400 கோடி வாடிக்கையாளர்கள்… 970 கோடி இணைப்புகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Number of mobile connection will go beyond 970 cr
மும்பை: உலக அளவில், 2018-ஆம் ஆண்டுக்குள் செல்போன் வாடிக்கையாளர்கள் மொத்தம் 400 கோடி பேர் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 970 கோடியாக உயரும் என இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது உலகில் 320 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரே வாடிக்கையாளர் அல்லது ஒரே நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் இணைப்புகளை பெறுவது அதிகரித்து வருகிறது.

இதனால் அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகைக்கு இணையாக அல்லது அதற்கும் அதிகமான அளவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் 2017-ஆம் ஆண்டில் மொத்தம் 970 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதே போன்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் 80 கோடி அதிகரித்து 400 கோடியாக உயர்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு நிலவரப்படி சர்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ள செல்போன் சேவை இணைப்புகளின் எண்ணிக்கை 680 கோடியாகும்.

4 சதவிகித வளர்ச்சி

உலக அளவில் ஒட்டுமொத்தத்தில் செல்போன் சேவை நிறுவனங்களின் வருவாய் 2008 முதல் 2012 வரையிலான காலத்தில் 4 சதவீதம் வளர்ச்சி கண்டு வந்தது. எனினும், 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் 2.3 சதவீத அளவிற்கே இருக்கும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

ஒரு லட்சம் கோடி டாலர்

கடந்த 2012-ஆம் ஆண்டில் உலக செல்போன் சேவை நிறுவனங்களின் வருவாய் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளதாக தெரிகிறது. இது, உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 1.4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை கொண்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வருவாய் அடிப்படையில் அதிகபட்ச வளர்ச்சி இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்பகுதியில் நிறுவனங்களின் வருவாய், 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்கும் என்றும், தற்போதைய வருவாயை விட 23 சதவீதம் அதிகரித்து 43,000 கோடி டாலரை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

English summary
In four years the number of Mobile connection in the world will go 970 Crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X